போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றிய தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 24, 2024

Comments:0

போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றிய தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு



போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றிய தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு A case has been registered against the headmaster who served with a fake certificate

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முளுவி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சேலம் கோரிமேடு பர்மா காலனியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 9 மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மீது வட்டார கல்வி அதிகாரி ஷேக் தாவூத் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் 10-ம் வகுப்பு முதல் பி.எட். வரை படித்ததாக போலி சான்றிதழ்கள் கொடுத்து கடந்த 1997 -ம் ஆண்டு முதல் ஏற்காட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றி வந்துள்ளார்.

அவர் மேல் சந்தேகம் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள உண்மை கண்டறியும் குழுவிற்கு அவரது சான்றிதழ்களை அனுப்பி வைக்கப்பட்டது. அதில் வெங்கடேசன் 10 மற்றும் 12-ம் வகுப்பு பி .எட். படித்துள்ளதாக கொடுத்தது போலி சான்றிதழ் என்பது தெரிய வந்தது. எனவே போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளிகளில் 27ஆண்டுகளாக பணியாற்றி வந்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதையடுத்து வெங்கடேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடினர். அப்போது அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். இதற்கிடையே போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்தது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை முடிவில் அவர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று தெரிவித்தனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews