புயல், வெள்ளத்தால் சேதமடைந்த பள்ளி-கல்லூரி சான்றிதழ்கள் பெற நாளை சிறப்பு முகாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 10, 2023

Comments:0

புயல், வெள்ளத்தால் சேதமடைந்த பள்ளி-கல்லூரி சான்றிதழ்கள் பெற நாளை சிறப்பு முகாம்

புயல், வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ்கள் பெற நாளை சிறப்பு முகாம்

புயல், வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு சேதமடைந்த சான்றிதழ்களை மீண்டும் புதிதாக வழங்க நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

நாளை மறுநாள் சென்னை மாவட்டத்தில் மாநகராட்சி கோட்ட அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.



புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் - தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உத்தரவு "மிக்ஜாம் புயல் - நிவாரணம் அறிவிப்பு"

"மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6 ஆயிரமும், இதர நிவாரண உதவித் தொகைகளும் உயர்த்தி ரேஷன் கடைகள் மூலமாக நிவாரண தொகை ரொக்கமாக வழங்கப்படும்"

"சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.8 ஆயிரமும், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்"

"எருது, பசு உயிரிழப்புகளுக்கு ரூ.37,500, ஆடுகளுக்கு ரூ.4,000 வழங்கப்படும்"

"சேதமடைந்த படகுகளுக்கு ரூ.50 ஆயிரமும், கட்டுமரங்களுக்கு ரூ.15 ஆயிரம், வல்லம் வகை படகுகளுக்கு ரூ.1 லட்சம், வலைகளுக்கு ரூ.15,000 நிவாரணம்

"நெல் மற்றும் இறவைப் பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரமும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.22,500, மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500 நிவாரணம்"

- முதலமைச்சர் ஸ்டாலின் *புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம்.*

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 6ஆயிரம் வழங்கப்படும்.

இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும்.

புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையை ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கனவே வழங்கப்படும் தொகை ரூ.5 ஆயிரத்தினை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

மானவாரி பயிர்கள் 33 சதவீதம் அல்லது அதற்கு மேல் பாதிக்கப்பட்டிருந்தால் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8500 வழங்கப்படும். 33 சதவீதத்திற்கு மேல் சேதமான பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம் வழங்கப்படும்.

சேதமடைந்த மரங்கள், நீண்டகால பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22,500 வழங்கப்படும். புயலினால் உயிரிழந்த எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500 வழங்கப்படும். வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணம் ரூ.3ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

முழுமையாக சேதமடைந்த மீன்பிடி வலைகள் உட்பட கட்டுமரங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.

பகுதியாக சேதமடைந்த கட்டு மரங்களுக்கு நிவாரண நிதி ரூ.10,000லிருந்து ரூ.15 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும்.

முழுவதும் சேதமடைந்த வல்லம் படகுகளுக்கு மானியத்தொகையாக ரூ.1லட்சம் வழங்கப்படும். முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு ரூ.7.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

சேதமடைந்த வலைகளுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews