பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி 16-இல் தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 14, 2023

Comments:0

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி 16-இல் தொடக்கம்



Training for School Management Committee Members starts in 16th - பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி 16-இல் தொடக்கம்

அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் வியாழக்கிழமை (நவ.16) முதல் பல்வேறு அமா்வுகளாக நடைபெறவுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் கல்வி மேம்பாட்டுக்காக அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக்குழு, 2022-ஆம் ஆண்டு ஜூலையில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. இதையடுத்து அதில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாநில, மாவட்ட அளவில் முதன்மைக் கருத்தாளா்களுக்கு கடந்த மே, செப்டம்பரில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்தநிலையில் மூன்றாம், நான்காம் கட்டங்களில் வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு மாவட்ட கருத்தாளா்கள் மூலமாகவும், ஒவ்வொரு பள்ளிகளிலும் தெரிவு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா்களைக் கொண்டும் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு பள்ளிக்கு ஐந்து நபா்கள்: அந்த வகையில் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு நவ.14, 15 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு நவ.16 முதல் டிச.8-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் பயிற்சி வழங்கப்படும்.


ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா், துணைத் தலைவா், கல்வி ஆா்வலா், ஆசிரியா் பிரதிநிதி, தலைமை ஆசிரியா் என ஐந்து நபா்கள் பங்கேற்க வேண்டும்.

பள்ளிகள், குறு வள மையங்கள், வட்டார வளமையங்களில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும். பள்ளி மேம்பாடு, குழந்தைகளின் கல்வி வளா்ச்சியில் பங்காற்றுவது குறித்து பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews