மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சி - மாணவர்கள் உள்ளீடு செய்து செயல்பாடு செய்வதற்குரிய படிநிலைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 01, 2023

Comments:0

மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சி - மாணவர்கள் உள்ளீடு செய்து செயல்பாடு செய்வதற்குரிய படிநிலைகள்

மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சி - மாணவர்கள் உள்ளீடு செய்து செயல்பாடு செய்வதற்குரிய படிநிலைகள்

மின்னுருவாக்கம் செய்யப்பட்ட கட்டகங்களில் உள்ள செயல்பாடுகள் ஒவ்வொன்றும் 20 நிமிடத்தில் செய்திடத்தக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செயல்பாடும் பின்வருமாறு 5 பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

பகுதி : 1

காணொலி பாடம்: (Video Lesson) (2 நிமிடங்கள்)

வாழ்வியல் திறனை அறிமுகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு பயிற்சியும் காணொலி பாடத்துடன் தொடங்குகிறது. ஒரு குறிப்பிட்ட வாழ்வியல் திறனை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இயங்கு படக்கதைகளும் (Animation Story), புரிதலை மதிப்பிடும் வகையிலான எளிய வினாக்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பகுதி : 2

தேவையான பொருள்கள்: (1 நிமிடம்)

செயல்பாடு செய்வதற்கு தேவையான பொருள்களை கணினியின் துணையுடன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதனை அங்கேயே தெரிவு செய்து கொள்ளலாம்.

பகுதி : 3

செயல்பாடு 1: அறிவுசார் செயல்பாடு: (5 நிமிடங்கள்) (Knowledge Based Activity)

காணொலி பாடம் வாயிலாக புரிந்து கொண்டதை மதிப்பிடும் வகையில் அறிவு மற்றும் புரிதல் சார் செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

செயல்பாடு 2: பயன்பாடு சார்ந்த செயல்பாடு: (5 நிமிடங்கள்) (Application Based Activity)

மாணவர்களின் உயர் சிந்தனைத் திறன்களை வளர்க்கும் வகையில் வாழ்க்கையோடு தொடர்புடைய கலை அடிப்படையிலான செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பகுதி : 4 சற்றே சிந்திப்போமா? (1 நிமிடம்)

ஒவ்வொரு பாடப்பகுதியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து மாணவர்கள் புரிந்துகொண்ட திறனை மீள் கொணரும் வகையில் பாடச்சுருக்கம் வழங்கப்பட்டுள்ளது.

பகுதி : 5 : பிரதிபலிப்பு மற்றும் மதிப்பீடு: (6 நிமிடங்கள்)

இப்பகுதியில் மாணவர்கள் தாங்கள் கற்றதைப் பிரதிபலிக்கும் விதமாக, எளிய அறிவுசார் வினாக்கள், திறந்தநிலை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் அனைத்து செயல்பாடுகள் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews