Breaking

Monday, March 20, 2023

TN budget 2023: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை

TN budget 2023: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் முதன்மைத் தேர்வுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனிடையே இந்தாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இதில் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகும், தேர்ந்தெடுக்கப்பட 1000 மாணவர்களின் முதல்நிலைத் தேர்வுக்கு ரூ.7,500 தொகை வழங்கப்படும் . அதேபோல முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இதற்கென ஆண்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

TN Budget 2023 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்டில், பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40, 299 கோடி நிதி ஒதுக்கீடு- நிதியமைச்சர் பழனிவேதியாகராஜன்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog