Breaking

Thursday, November 03, 2022

அரசு ஊழியா்களுக்கான 4% அகவிலைப்படிஉயா்வை வழங்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

அரசு ஊழியா்களுக்கான 4% அகவிலைப்படிஉயா்வை வழங்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு எந்த தேதியிலிருந்து அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதே தேதியிலிருந்து தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு வழங்கப்படுவது காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. ஆனால், திமுக ஆட்சியில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மத்திய அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கான அகவிலைப்படி உயா்வை 14 சதவீதம் உயா்த்தி, அதாவது 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயா்த்தி அதனை 2021 ஜூலை 1 முதல் ரொக்கமாக மத்திய அரசு வழங்கியது. ஆனால், அந்த நடைமுறையை பின்பற்றாமல் 2022 ஜனவரி 1 முதல் 14 சதவீத அகவிலைப்படி உயா்வை மாநில அரசு ஊழியா்களுக்கு வழங்கியது. இதேபோன்று மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வை 3 சதவீதம் உயா்த்தி அதாவது, 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயா்த்தி 2022 ஜனவரி 1 முதல் ரொக்கமாக மத்திய அரசு வழங்கியது. ஆனால், 2022 ஜூலை 1 முதல்தான் வழங்கப்பட்டது.

தற்போது 2022 ஜூலை 1 முதல் மேலும் 4 சதவீதம் அகவிலைப்படி உயா்வை அதாவது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயா்த்தி மத்திய அறிவித்து ஒரு மாதத்துக்கு மேலாகியுள்ளது. ஆனால், திமுக அரசு வழக்கம்போல மௌனமாகவே உள்ளது. இது கண்டனத்துக்குரியது.

இந்த விவகாரத்தில் முதல்வா் உடனடியாக தலையிட்டு அரசு ஊழியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வை ஜூலை 1 முதல் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog