ஒய்வை அறிவித்தார் ரோஜர் பெடரர்: ரசிகர்கள் அதிர்ச்சி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 15, 2022

Comments:0

ஒய்வை அறிவித்தார் ரோஜர் பெடரர்: ரசிகர்கள் அதிர்ச்சி!

FcswVUFaAAAa-Op
FcswVUCacAAnsf6
FcswVUBaMAAu_rC
FcswVUBaUAEW5-3
டென்னிஸ் அரங்கின் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தனது ஓய்வை அறிவித்தார்.

டென்னிஸ் உலகின் ஜாம்பவான் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். 20 முறை கிராண்ட் ஸ்லாம், 8 விம்பிள்டன் ஆகிய பட்டங்களை வென்றுள்ள இவர். சர்வதேச டென்னிஸ் உலகில் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தார்.

பல மாதங்களாக டென்னிஸ் போட்டிகளில் விளையாடவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த கிராண்ட் ஸ்லாம் தொடரான விம்பிள்டன் போட்டியிலும் காயம் காரணமாக அவரால் பங்கேற்க முடியவில்லை.

மீண்டும் இவர் எப்போது களத்துக்கு திரும்புவார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் திடீரென இன்று ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். அடுத்த வாரம் நடைபெறும் லேவர் கோப்பை தொடர் தனது கடைசி போட்டியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இனியும் சவாலாக ஆட முடியவில்லை எனில் விளையாடுவதை நிறுத்துவது சிறந்தது. மகிழ்ச்சியாக இருக்க எனக்கு டென்னிஸ் தேவையில்லை என்று நினைக்கிறேன் கடந்த ஜூலை மாதம் ஒய்வு குறித்து சூசகமாக அறிவித்தார். இந்நிலையில் இன்று தனது ஒய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ரோஜர் பெடரர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84614292