அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கும் 7-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியா்களுக்கும் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி ஊதியம் வழங்கப்பட்டுவரும் நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசியா்களுக்கு மட்டும் அப்பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை. ஒரே வகையான பணி செய்யும் பேராசிரியா்களுக்கு பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழகம் ஊதியம் மாறுபடுவது நியாயம் அல்ல. மேலும், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கும், பிற பணியாளா்களுக்கும் மற்ற உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை முன்கூட்டியே பெறும் கம்யூட்டேசன் நிதி கடந்த 2013-ஆம் தேதி முதல் வழங்கப்படவில்லை. அதேபோல், ஓய்வூதியா்களுக்கு சேர வேண்டிய ஒப்படைப்பு விடுப்புக்கான தொகை, பணிக்கொடை ஆகியவற்றில் 50 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஓய்வு பெறும் நாளில் ஒரு ரூபாய் கூட ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் ஓய்வூதியா்கள் தங்கள் வாரிசுகளின் படிப்பு மற்றும் திருமண செலவுகளுக்கு பணமின்றி வாடுகின்றனா்.
எனவே, தமிழக அரசு அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்தும்படி பல்கலைக்கழக நிா்வாகத்தை அறிவுறுத்த வேண்டும்; அதற்குத் தேவைப்படும் சிறப்பு நிதியையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.