கலந்தாய்வை ஒத்திவைக்க ஆசிரியர்கள் வலியுறுத்தல்
மதுரை: 'தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரத்தை உணர்ந்து கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பொதுமாறுதல் கலந்தாய்வை ஒத்திவைக்க வேண்டும்' என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஜன., 24 முதல் மாறுதல் கலந்தாய்வு துவங்கி பிப்., 23 வரை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நேரடி வகுப்புகளை தவிர்க்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கல்வி வளர்ச்சி தொடர்பாக ஆலோசிக்கப்படும் மதுரை உட்பட மண்டல ஆய்வுக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: இக்கல்வியாண்டு முடிவுற இன்னும் இரண்டு மாதம் இருக்கும் நிலையில் தற்போது இடமாறுதல் அளிக்கப்பட்டால் ஆசிரியர்களால் ஆன்லைன், வாட்ஸ்ஆப், கல்வித் தொலைக்காட்சி மூலம் மேற்கொள்ளப்படும் கற்பித்தலில் இடையூறு ஏற்படும்.
நேரடி வகுப்புகள் இல்லாத நிலையில் முகம் அறியாத ஆசிரியர் - மாணவர்கள் உறவுகளிலும் இடைவெளி ஏற்படும். மேலும் கொரோனா பரவும் சூழலில் குடும்பங்களை எவ்வாறு மாற்றிக்கொண்டு செல்வது. குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்ப்பது பெரும் சவாலாக மாறும். தொற்று பாதிப்பு ஆசிரியர்கள் அதிகரித்து வருவதால் கலந்தாய்வின்போது பலர் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே அவசரகதியில் நடத்தாமல் நோய் தொற்று அல்லது கல்வியாண்டு முடிவுற்ற பின் இதுபோன்ற கலந்தாய்வு நடத்த வேண்டும். அதுவரை தள்ளிவைக்க வேண்டும் என்றனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.