தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ரத்து? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 21, 2021

2 Comments

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ரத்து?

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ரத்து?

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ரத்து செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா காரணமாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் இருந்தன . இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் , ஊரடங்கு விதிக்கப்பட்டதன் எதிரொலியாக தற்போது தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அத்துடன் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.

தொற்று பரவலை கருத்தில்கொண்டு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்படுவதுடன் முக கவசம் அணிந்து, மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதி முதல் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சிமுறை வகுப்பு ரத்து செய்யப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில் கொரோனா காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல் வெளியானது . வழக்கமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி அரையாண்டு விடுப்பு பத்து நாட்கள் வழங்கப்படும். ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு டிசம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரையில் திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சனிக்கிழமைகளில் வருவதால் அன்று மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் தொடர்ந்து 4 மாதம் வரை வாரத்துக்கு ஆறு நாட்கள் என பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் அரையாண்டு விடுமுறை வழங்காததால் ஏமாற்றமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. அதிலும் இருக்கட்டும் 10 ஆண்டு காலமாக பகுதிநேர ஆசிரியராக பணி ஆற்றிக்கொண்டு இருக்கும் சிறப்பு ஆசிரியரை தேர்தல் அறிக்கையில் கூறியதுப்போல் எங்களை"பணிநிரந்தரம்" செய்தால் நாங்கள் காலத்துக்கு மறவாமல் "நன்றி" உள்ளவராக இருப்போம்.ஆசிரியர்கள் உங்களுக்கு "ஓட்டு" போட்டு காரணம்."திமுக" ஆட்சியின் மேல் ஒரு நம்பிக்கையே.தயவு செய்து எங்களை."பணிநிரந்தரம்" செய்யுங்கள் முதல்வர் மு.க ஸ்டாலின் ஐயா."தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற எடுத்துக்காட்டுக்கு விளக்குபவராக இருந்தால்.தந்தையை பின்பற்றுபவராக இருப்பின் இதை செய்யுங்கள்.அப்பொழுதுதான் அவர் ஆத்மா நம்பிக்கை கொள்ளும்.எங்களுக்கும் நம்பிக்கை பிறக்கும்.🙄🙄🙄🙄🙄😔😔😔😔😷😷😷😷🙏🙏🙏🙏

    ReplyDelete
  2. வரவேற்கிறேன். மாணவர்கள் கல்வியில் நலன் கருதி எடுத்த இந்த முடிவு நல்ல பலன் கிடைக்கும்.தமிழக அரசின் சிறந்த அனுகுமுறை.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews