திருப்பத்தூர்: பொது சுகாதாரத்துறை, மாவட்ட நல சங்கம் மூலமாக இடைநிலை பணியாளர் & பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வரும் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்து சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்!
செ.வெ.எண்.598/2021
பத்திரிகைச் செய்தி
நாள்.10.12.2021
திருப்பத்தூர் மாவட்டம், பொது சுகாதார துறை, மாவட்ட நல சங்கம் மூலமாக, இடைநிலை பணியாளர் (Mid Level Health Provider) மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்)/சுகாதார ஆய்வாளர் (நிலை-2) ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இடைநிலை சுகாதாரப்பணிக்கு 50 வயதிற்குட்பட்ட பெண்கள், செவிலியர் பட்டப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம், தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல்நோக்கு சுகாதார பணியாளர்(ஆண்) /சுகாதார ஆய்வாளர் (நிலை-2) பணிக்கு. 50 வயதிற்குட்பட்ட ஆண்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி உயிரியல், தவரவியல், விலங்கியல் பாடம்) பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இரண்டு வருட பல்நோக்கு சுகாதார். பணியாளர்/சுகாதார ஆய்வாளர்/துப்புரவு ஆய்வாளர் பயிற்சி அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், காந்தி கிராம் கிராமிய நிறுவனம், நிகர் நிலை பல்கலைக்கழகங்களில், இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையால் வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் விவரங்கள் வலைதளம் (https://tirupathur.nic.in) முலமாக பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவன நகல்களுடன், மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்திற்கு வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களை தேசிய நலவாழ்வு குழுமம் வலைதளத்திலும் (http://nhm.tn.gov.in/en/node/6228) தெரிந்து கொள்ளலாம். இந்நியமனங்கள் முழுக்க, முழுக்க தற்காலிக அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.