பெரம்பூர்: சென்னை பெரம்பூர் வீனஸ் மார்க்கெட் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருபவர்கள் பவித்ரா, வாணி, சங்கரேஸ்வரி. இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து, வீனஸ் மார்க்கெட் வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ரோட்டில் பிளாஸ்டிக்கவர் கிடந்ததை பார்த்தனர். பின்னர் அதை எடுத்து பிரித்து பார்த்தபோது அதில் பணம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஸ்டல் சுகந்தியிடம் தெரிவித்தனர்.
அவர், பிளாஸ்டிக் கவரில் இருந்த பணத்தை எண்ணி பார்த்தார். அதில் பத்தாயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 10 ஆயிரம் ரூபாயை தலைமையாசிரியர் கிரிஸ்டல் தலைமையில் செம்பியம் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் கோமதி காவல்நிலையத்தில் இல்லை. இதனால், மறுநாள் அரசு பள்ளிக்கு சென்ற இன்ஸ்பெக்டர், 3 மாணவிகளையும், தலைமையாசிரியரையும் பாராட்டினார். மேலும் மாணவிகளுக்கு சன்மானமாக 500 ரூபாய் கொடுத்து கவுரவித்தார்.
இதையடுத்து, பணத்தை தவறவிட்டவர்கள் செம்பியம் காவல்நிலையத்தில் தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்தால், அவர்களிடம் பணம் ஒப்படைக்கப்படும் என இன்ஸ்பெக்டர் கோமதி தெரிவித்துள்ளார். இதையறிந்த ஆசிரியர்களும், பொதுமக்களும் மாணவிகளை பாராட்டினர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.