சிறுபான்மையின மாணவ/ மாணவியர்கள் ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை பெற வரும் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், என சென்னை மாவட்ட கலெக்டர் விஜயா ராணி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் இந்திய/ மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் (இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின்) மதங்களை சேர்ந்த மாணவ/ மாணவியர்களுக்கு 2021-22ம் ஆண்டிற்கு பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை ஒன்றிய அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 15.12.2021 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள மாணவ/ மாணவியர் கல்வி உதவித்தொகை பெற்று பயனடையலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.