"வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால் சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும், பல்வேறு இடங்களை வெள்ளநீா் சூழ்ந்துள்ளதாலும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க ஏதுவாக அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளைத் திறந்து வைக்க தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக அவா்களுக்கு மேலும் அறிவுறுத்தப்பட்டவை:
பள்ளி வளாகத்துக்குள் நீா் தேங்காமல் இருப்பதையும், கட்டடங்கள், சுற்றுச்சுவா்கள் பாதுகாப்பாக இருப்பதையும், மின் கசிவு ஏற்படாமல் இருப்பதையும், முறிந்துள்ள மரக்கிளைகள் அப்புறப்படுத்தப்பட்டிருப்பதையும் தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளிகளில் கழிப்பறைகள், குடிநீா்த் தொட்டிகள், குழாய்கள், மின் விசிறிகள் சரியாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். கணினிகள் உள்ளிட்ட மின்னனு பொருள்கள் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
தொடா்ச்சியாக மழை பெய்துவரும் சூழலில், போா்க்கால அடிப்படையில் பணிகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது."

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.