'இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பதிவு செய்த தன்னார்வலர் வீடுகளுக்கு சென்று சான்றிதழ்சரிபார்த்துதேர்வு, நேர்காணல்நடத்த வேண்டும்' எனமுதல்நாள் இரவு தெரிவித்து மறுநாள் காலை செயல்படுத்த உத்தரவிட்டதால் தலைமையாசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தன்னார்வலர்களை தேர்வு செய்வதில் கல்வித்துறை ஏன் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.முதற்கட்டமாக சென்னை, மதுரை உட்பட 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மாலை 5:00 - இரவு 7:00 மணி வரை கற்பிக்கும் பணிக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.அவர்களுக்கு தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தும் உத்தரவு தற்போது அவசர அவசரமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் தன்னார்வலர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க ஜூம் மீட்டிங் நடத்தி அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும் பல ஆயிரம் பேர் பதிவு செய்து உள்ளனர். அவர்கள் வீடுகளுக்கு சென்று சான்றிதழ் சரிபார்ப்பது சவாலான விஷயம். முதல் நாள் இரவு தெரிவித்து மறுநாளே அவர்களை அரசு பள்ளி ஹைடெக் லேப்களுக்கு வரவைத்து தேர்வு, நேர்காணல் நடத்த வேண்டும் என்ற உத்தரவும் சரியல்ல.
இதற்கு பள்ளி மேலாண்மை குழுவின் ஒப்புதலும் பெற வேண்டும். குறுகிய காலத்தில் தலைவர், உறுப்பினர் ஒப்புதல் கிடைப்பதும் கஷ்டம். களநிலவரம் தெரியாமல் அவசர கோலத்தில் தன்னார்வலர்களை தேர்வு செய்வது சர்ச்சை ஏற்படுத்தும். இதனை அதிகாரிகள் புரிந்து போதிய அவகாசம் அளிக்க வேண்டும் என்றனர்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.