மாதம் ரூ.3,000/- உதவித்தொகை: தமிழ்நாடு அரசு - இந்து சமய அறநிலையத்துறை - வைணவ பயிற்சிக்கான ஒராண்டு சான்றிதழ் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிக்கை - விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.12.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 25, 2021

Comments:0

மாதம் ரூ.3,000/- உதவித்தொகை: தமிழ்நாடு அரசு - இந்து சமய அறநிலையத்துறை - வைணவ பயிற்சிக்கான ஒராண்டு சான்றிதழ் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிக்கை - விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.12.2021

தமிழ்நாடு அரசு - இந்து சமய அறநிலையத்துறை

அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்

சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும்

வைணவ பயிற்சிக்கான ஒராண்டு சான்றிதழ் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிக்கை விளம்பரம்

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் உரிய பயிற்சியும், தகுதிகளும் உள்ள இந்துக்களில் சாதி வேறுபாடின்றி அர்ச்சகராக நியமனம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு 2021-2022 மானியக் கோரிக்கை அறிவிப்பு எண்.95ல் அறிவிக்கப்பட்டபடி, வைணவம் (பாஞ்சராத்ர ஆகமம்) ஓராண்டு சான்றிதழ் பயிற்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் உரிய படிவத்தில் விவரங்களை முழுமையாக அளித்து உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கொள்வதற்கான தகுதிகள்

1. விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும்.

2. குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3.01.01.2022 அன்று 14 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 4. இந்து வைணவ கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.

குறிப்பு: 1. பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கி பயில வேண்டும்.

| 2. பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவருக்கு இலவசமாக உணவு, சீருடை, உறைவிடம், பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.3,000/- உதவித்தொகை ஆகியவை வழங்கப்படும். 3. மாணவர்களின் தேர்வு, தேர்வுக்குழுவின் முடிவுக்கு உட்பட்டது.

4. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 24.12.2021 அன்று மாலை 5.00 மணி வரை

5.விண்ணப்ப படிவங்களை திருக்கோயில் இணையதளத்திலும் www.srirangam.org மற்றும் hrce.tn.gov.in இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

6. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

இணை ஆணையர் / செயல் அலவலர், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்,

ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி- 620006.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews