மழைக்காலங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வழிமுறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 08, 2021

Comments:0

மழைக்காலங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வழிமுறைகள்

"மழைக்கால நோய்கள் வராமல் தடுக்க மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வழிமுறைகள்:

► மழைக்காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு காலரா, மஞ்சள் காமாலை டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க குடிநீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கவும்.

► உணவு உட்கொள்ளும் முன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகும் சோப்பு உபயோகப்படுத்தி முறையாக 20 நொடிகள் கைகளை நன்கு தேய்த்து கழுவவும்.

► வீட்டிற்கு வெளியில் செல்லும்போது காலணிகளை அனிந்து செல்லலாம். வீட்டிற்கு வெளியில் சென்று வந்த ஒவ்வொரு முறையும் கை, கால்களை சோப்பு தேய்த்து கழுவவும். ► சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பம்புகளில் தேங்கிய நீரை குடிநீராகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

► சாலையோரங்களில் விற்கப்படும் ஈ மொய்த்த மற்றும் தூசு படிந்த உணவு பண்டங்களை உண்பதை தவிர்க்கவும். சமைத்தவுடன் உணவினை சூடான நிலையிலேயே சாப்பிடவும். பழைய உணவினை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்

► திறந்த வெளியில் மலம் சிறுநீர் கழிப்பதை தவிர்த்து பொது கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

► காய்ச்சல் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனை மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவரிடம் முறையான சிகிச்சை பெறவும். சுய சிகிச்சை மருத்துகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.

► வயிற்றுப்போக்கு மற்றும் வாந்திபேதி ஏற்பட்டால் உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் வீட்டிலுள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருகவும். உடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews