கலந்தாய்வு இல்லை என்பது வெறும் வதந்தி?? - பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு உடணடியாக நடத்தக் கோருதல் சார்ந்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 15, 2021

1 Comments

கலந்தாய்வு இல்லை என்பது வெறும் வதந்தி?? - பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு உடணடியாக நடத்தக் கோருதல் சார்ந்து

பொருள் - பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு உடணடியாக நடத்தக் கோருதல் சார்ந்து

கொரானா தொற்று காலம் என்பதால் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த இரு ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை கலந்தாய்வு உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று ஜூன் மாதத்திலிருந்து எமது தேசிய ஆசிரியரி சங்கம் தமிழ்நாடு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது ஆனால் கலந்தாய்பாபு இதுவரை நடத்தப்பட வில்லை.

பதவி உயர்வு என்பது ஆசிரியர்களின் பணிக்காலத்தில் இரண்டு அல்லது மூன்று முறைகளுக்கு மேல் கிடைப்பதில்லை. பதவி உயர்வு இல்லாமலேயே பலபேர் ஓய்வு பெறக் கூடிய சூழ்நிலையும் உள்ளது. உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 1000 க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன இதனால் மூத்த ஆசிரியர்கள் கூடுதல் பொறுப்பாக இதை கவனிக்கும் போது கற்பித்தல் சார்ந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. தற்போது இரண்டு இலட்சம் மாணவர்கள் புதிதாக பல அரசுப்பள்ளிகளில் சேர்ந்திருப்பதால் கூடுதல் ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடம் வழங்கப்படுதலும் அவை நிரப்பப்படுதலும் அத்தியாவசிய தேவை ஆகிறது.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பது போன்ற நிலையை மாற்றிட போர்க்கால அடிப்படையில் ஒளிவு மறைவு அற்ற வெளிப்படையான கலந்தாய்வு இவ்வாண்டே நடத்தப்பட வேண்டும் என்பதே ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தின் மனநிலையாக உள்ளது. இந்நிலையில் பத்திரிக்கைகளில் "இவ்வாண்டு கலந்தாய்வு இல்லை" என்பது போன்று வெளிவரும் செய்திகள் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. ஆகவே கலந்தாய்வு இல்லை என்பது வெறும் வதந்தி என்பதை தெளிவாக ஆசிரியர்களுக்கு தெரிவிப்பதோடு கலந்தாய்வு நெறிமுறை குறித்த அரசாணை வெளியிட வேண்டும் எனவும் காலம் தாழ்த்தாமல் பதவி உயர்வு பணி மாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும் எனவும் தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

1 comment:

  1. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நயவஞ்சகமாக ஏமாற்றுகிறது.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews