பள்ளிக்கு சென்றால் செல்போன் கிடைக்காது என்பதால் பிளஸ் 2 மாணவி தன்னை 5 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. கேரள மாநிலம், பத்தனம்திட்டா அருகே உள்ள எடத்துவாவை சேர்ந்த 17 வயதான ஒரு மாணவி அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் முதல் இவர் ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தார். இதற்காக அவரது பெற்றோர் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்துள்ளனர். நாளடைவில் இவர் வீடியோ கேம்களுக்கு அடிமையானார்.
இந்நிலையில். கடந்த வாரம் முதல் கேரளாவில் பள்ளிகள் திறக்கப்பட்டன. வீடியோ கேமுக்கு அடிமையானதால் இந்த மாணவிக்கு பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை. தான் பள்ளிக்கு செல்லவில்லை என்றும், தொடர்ந்து ஆன்லைனிலேயே வகுப்பில் கலந்து கொள்தாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால், அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக அவரை பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டிலிருந்து பள்ளிக்கு 2 கிமீ தூரம் உள்ளது. பெரும்பாலும் அந்த மாணவி நடந்தது தான் பள்ளிக்கு செல்வார். இந்நிலையில், 3 தினங்களுக்கு முன் மதியம் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி, வரும் வழியில் தன்னை 5 பேர் சேர்ந்து கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், எடத்துவா போலீசில் புகார் செய்தனர். உடனடியாக போலீசார் விசாரணையை தொடங்கினர். முதல் கட்ட விசாரணையிலேயே அந்த மாணவி கூறியது பொய் என தெரிய வந்தது. தொடர்ந்து, அந்த மாணவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது தான் குட்டு வெளியானது. வீடியோ கேம்களுக்கு அடிமையானதால் பள்ளிக்கு சென்றால் செல்போன் கிடைக்காது எனக் கருதி அந்த மாணவி பலாத்கார நாடகமாடியது உறுதியானது. இந்த பொய் புகார் கூறுவதற்கு வேறு யாரும் தூண்டுதலாக இருந்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.