பள்ளி கல்விக்காக இயங்கி வரும் பிரதாம் என்ற அமைப்பு ஆண்டுதோறும் கல்வி நிலை குறித்த ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதன் 16வது ஆண்டறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 25 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 581 மாவட்டங்களில், 76,706 குடும்பங்கள் மற்றும் 75,234 குழந்தைகள், 7,399 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் கருத்து கேட்டு தயாரிக்கப்பட்டதாகும். இதில்,2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் விலகி அரசுப் பள்ளிகளில் சேரும் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதற்கு தொற்றுநோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடி, அரசுப் பள்ளிகளில் இலவச வசதிகள், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வசதி இல்லாமை இடம்பெயர்வு ஆகியவை முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 2018ல் அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கை 64.3%ல் இருந்து 65.8% ஆக உயர்ந்தது. இது 2021ல் 70.3% ஆக உயர்ந்துள்ளது, அதாவது கடந்த ஒரு ஆண்டில், நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 4.5% அதிகரித்துள்ளது என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை ஏறத்தாழ 6% அதிகரித்துள்ளது. அதே சமயம், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2020ல் 28.8%ல் இருந்து இந்த ஆண்டு 24.4% ஆக குறைந்துள்ளது. 1 மற்றும் 2ம் வகுப்புகளுக்கு, 2020 மற்றும் 2021க்கு இடையில், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 10.9% ஆகவும், மாணவிகள் சேர்க்கை 7.4% ஆகவும் உயர்ந்துள்ளது. தொற்றுநோய்க்கு முந்தைய காலங்களைப் போலவே, அரசுப் பள்ளிகளில் சேரும் பெண்களின் ஒட்டுமொத்த விகிதம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது என்று அறிக்கை கூறுகிறது. * டியூசன் செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், டியூசனுக்கு செல்லும் குழந்தைகள் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கேரளாவைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் டியூசன்களின் போக்கு அதிகரித்து வருவதாகவும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. 2018ல் நாடு முழுவதும் 30%க்கும் குறைவான குழந்தைகளே டியூசன் சென்ற நிலையில், 2021ல் இந்த விகிதம் கிட்டத்தட்ட 40% ஆக உயர்ந்துள்ளது. இந்த விகிதம் அனைத்து பள்ளி வகைகளிலும் அதிகரித்துள்ளது.
* உபி., கேரளாவில் அதிகம் 2018 மற்றும் 2021க்கு இடையில், நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் முறையே 13.2% மற்றும் 11.9% ஆக அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. 3வது இடத்தில் தமிழ்நாட்டில் 9.6% அடுத்தடுத்த இடங்களில் கர்நாடகா (8.3%), ஆந்திரா (8.4%), மேற்கு வங்கம் (3.9%), தெலங்கானா (3.7%), உள்ளன.
* 26.1% பேரிடம் ஸ்மார்ட் போன் இல்லை வீட்டில் ஸ்மார்ட்போன் வசதி உள்ள மாணவர்கள் எண்ணிக்கை கடந்த 2018ல் 36.5 சதவீதமாக இருந்த நிலையில், 2021ல் 67.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் வீட்டில் ஸ்மார்ட்போன் வைத்திருந்தாலும் (67.6%), அவர்களில் கால் பகுதியினர் (26.1%) அந்த வசதியை பெறவில்லை என்பதை சுட்டிக் காட்டி உள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.