புதிதாக பணியில் சேரும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள், 8 ஆண்டுகளுக்கு ஒரே இடத்தில் பணிபுரிய வேண்டும் என்ற வகையில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் (School education department) அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான புதிய விதிமுறைகள் விரைவில் வெளியாக உள்ளன.
புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள், 8 ஆண்டுகளுக்கு ஒரே இடத்தில் பணிபுரிய வேண்டும் என்ற வகையில் நிபந்தனை கொண்டு வர அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. மேலும் நடப்பு கல்வியாண்டிற்க்கான ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கிடையே ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இது குறித்த அரசாணை விரைவில் வெளியாக உள்ளது. அந்தவகையில், அரசாணை வெளியாகும் தேதியில் இருந்து புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள், 8 ஆண்டுகளுக்கு ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும் எனவும், அதற்கு பிறகே அவர்கள் பணியிட மாறுதல் பெற முடியும். மேலும் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களும் 8 ஆண்டுகளுக்கு ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும் என விதிமுறைகள் கொண்டு வரப்பட உள்ளன.
வேறுத்துறை மாறுதல் பெற அனுமதி
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், மாநகராட்சி, ஆதிதிராவிட நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் , பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பிறத்துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.ஆனால் அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட அந்த நடைமுறை மீண்டும் இப்போது அமல்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது. இதனால் வேறுத்துறையில் பணியிட மாற்றம் பெற்று ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஊர் அருகில் பணிக்கு செல்ல முடியும். பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் கட்டாய பணியிட மாற்றம் செய்யப்பட மாட்டார்கள் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
- இது தந்தி செய்தி தகவல் மட்டுமே - முழு விவரம் அரசாணை வந்த பிறகே தெரியவரும்!!!

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.