Breaking

Tuesday, November 09, 2021

ரூ.5 ஆயிரம் பரிசு - 12ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு பேச்சு போட்டி

தமிழ் வளர்ச் சித்துறை சார்பில் ஜவகர் லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு 12ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு பேச்சு போட்டி நடக்கிறது.

தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் கூறியிருப் பதாவது, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2021-22ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை அறிவிப்பின் படி நாட்டிற்காக பாடு பட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர் லால் நேரு, அண்ணல் அம்பேத்கா, பெரியார், அண்ணா, கலைஞர் ஆகி யோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில்கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்க ளுக்குபேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதன்படி வரும் 14ம் தேதி ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு வரும் 12ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்த னியே பேச்சு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. கல் லூரி, பள்ளி போட்டியில் பங்கு பெறும் மாணவர்க ளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயி ரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும்போட்டியில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்கள் இருவர் தனி யாகதேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog