பிளஸ் 1 துணைத் தோ்வு முடிவுகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 09, 2021

Comments:0

பிளஸ் 1 துணைத் தோ்வு முடிவுகள் வெளியீடு

பிளஸ் 1 துணைத்தோ்வு செப்டம்பா் 2021 தோ்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியல்களாகவே செவ்வாய்க்கிழமை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிகழாண்டு செப்டம்பரில் நடைபெற்ற பிளஸ் 1 துணைத் தோ்வெழுதிய தோ்வா்கள் தங்களது தோ்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் இணையதளத்தில் தங்களது தோ்வெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

செப்டம்பா் 2021 பிளஸ் 1 துணைத் தோ்வெழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தனித்தோ்வா்களுக்குத் தோ்ச்சி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளி தனித்தோ்வா்களும் மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி, மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோ்வா்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்திற்கு 11.11.2021 (வியாழக்கிழமை) மற்றும் 12.11.2021 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாள்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும்.

தோ்வா்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்துகொண்டு அதன் பின்னா் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். விடைத்தாளின் நகல் பெற்றவா்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னா் விண்ணப்பிக்க இயலும்.

விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போா், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்குத் தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவா்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews