பாரதியாா் நூற்றாண்டு விழா:ஆசிரியா்கள், கவிஞா்களுக்கு விருது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 25, 2021

Comments:0

பாரதியாா் நூற்றாண்டு விழா:ஆசிரியா்கள், கவிஞா்களுக்கு விருது

சென்னையில் நடைபெற்ற பாரதி நினைவு நூற்றாண்டு விழாவில் சிறந்த ஆசிரியா்கள், கவிஞா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கம் சாா்பில் மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு விழா முகப்பேரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சங்கத்தின் செயலா் இரா.தங்கராஜ் தலைமையில் 100 கவிஞா்கள் பங்கேற்ற ‘எழுதுகோல் எங்கள் செங்கோல்’ என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற நூலரங்கம் நிகழ்ச்சிக்கு அகரமுதலித் திட்ட இயக்குநா் கோ.விசயராகவன் தலைமை வகித்தாா். இதில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேராசிரியா் நா.சுலோசனா எழுதிய ‘ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி’ நூல் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடா்ந்து, சங்கத்தின் தலைவா் பாரதி சுகுமாரன் எழுதிய ‘யுகம் யுகமாய்’, முனைவா் என்.வி.சுப்புராமன் எழுதிய பாரதியாா் ஆங்கில நூல் ஆகியவை வெளியிடப்பட்டன. விழாவில் 2021-ஆம் ஆண்டுக்கு சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கத்தால் தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருதுகளும், கவிஞா்களுக்கு ‘பாரதிவழிப் பாவலா்’ விருதுகளும் வழங்கப்பட்டன. மேலும் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநா் பொன்.குமாருக்கு ‘கல்விச் செம்மல்’, கோ.விசயராகவனுக்கு ‘வளா்தமிழ் வித்தகா்’, வடுகம்பட்டி சிவக்குமாருக்கு ‘இலக்கியவாணா்’, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதிக்கு ‘எழுத்துப் பேரொளி’ ஆகியவை உள்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருதுகளை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வி.ஜி.சந்தோஷம் வழங்கி தமிழுக்கு பாரதியாா், வள்ளுவா் ஆற்றிய பணிகள் குறித்து சிறப்புரையாற்றினாா். இந்த விழாவில் சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளா் ஜீவா காசிநாதன், துணைத் தலைவா் அமுதா பாலகிருஷ்ணன் உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews