Breaking

Monday, October 25, 2021

துணை மருத்துவப் படிப்புகள்: இன்று ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம். உள்ளிட்ட 19 துணை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு திங்கள்கிழமை தொடங்குகிறது.

தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம்., பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட மருத்துவம் சாா்ந்த 19 வகையான துணை பட்டப்படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அப்படிப்புகளுக்கான நிகழ் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையதளத்தில் பதிவு செய்வது திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நவம்பா் 8-ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.

விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் செயலாளா், தோ்வுக் குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியாா் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரியில் நவம்பா் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog