சரவெடி வெடிப்போர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 31, 2021

Comments:0

சரவெடி வெடிப்போர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக அரசு

செய்தி வெளியீடு எண்:993

நாள்:30.10.2021

செய்தி வெளியீடு

மாண்பமை உச்சநீதி மன்றம் தனது 29.10.2021ஆம் தேதியிட்ட தீர்ப்பில் 2016, 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் பல்வேறு வழக்குளில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட மாண்பமை உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளை மீண்டும் வலியுறுத்தி, எதிர்வரும் தீபாவளி பண்டிகை மற்றும் இன்னபிற நிகழ்வுகளின் போது சாதாரண வகையிலான பட்டாசுகளின் பயன்பாட்டிற்கு எந்தவிதமான தடையும் இல்லை எனவும், ஆனால் பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சூற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் இரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதித்து ஆணையிட்டுள்ளது.

மேற்படி மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையான அளவில் செயல்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள், சரவெடி மற்றும் பேரியம் இரசாயனம் கலந்த பட்டாசுகள் தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை சேமித்து வைக்கவும், கொண்டு செல்லவும். விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மேற்படி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை சரவெடி உட்பட பட்டாசு வகைகளை வெடிக்கக் கூடாது கொள்ளப்படுகிறார்கள். எனவும் கேட்டுக்

மேற்படி மாண்பமை உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது அரசு விதிமுறைகளின்படி, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews