அரசு பள்ளியில் சுவேட்சா திட்டம் தொடக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 06, 2021

Comments:0

அரசு பள்ளியில் சுவேட்சா திட்டம் தொடக்கம்!

சித்தூர் சந்தப் பேட்டை மாநகராட்சி அரசு பள்ளியில் சுவேட்சா திட்டத்தை துணை முதல்வர் நாராயணசாமி நேற்று தொடங்கி வைத்தார். சித்தூர் சந்தப்பேட்டையில் மாநகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நேற்று சுவேட்சா திட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் துணை முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு சுவேட்சா திட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து, அவர் கூறியதாவது: முதல்வர் ஜெகன்மோகன் முதலமைச்சராக பொறுப்பேற்று 50 ஆயிரத்து 673 அரசு பள்ளிகளில் நாடு நேடு திட்டத்தை கொண்டு வந்து பழைய பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக சீரமைத்தார். அதன்படி பள்ளிகளில் மின்விசிறிகள், மின் விளக்குகள், மினரல் வாட்டர் குடிநீர் வசதி, தரமான இருக்கைகள், டிஜிட்டல் பலகைகள் மைதானம், பள்ளி வளாகம் முழுவதும் பூங்காக்கள், வகுப்பறைகளில் கிரானைட் கற்கள் என தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றப்பட்டது. இதற்கு முன்பு அரசுப் பள்ளி எவ்வாறு இருந்தது, தற்போது சீரமைப்பிற்கு பின் எவ்வாறு பள்ளி உள்ளது என்பது புகைப்படம் எடுத்து ஒட்டப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், டை, பெல்ட் உள்ளிட்ட அனைத்து வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் ஒவ்வொரு வகையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளியிலும் ஆங்கில மொழி பாட திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தால் மாணவர்கள் அதிகளவில் பயனடைந்துள்ளனர். மேலும், தனியார் பள்ளியில் படிக்க வைக்காமல் மாணவர்களை அவர்களது பெற்றோர் அரசு பள்ளியில் சேர்த்து வருகின்றனர். இது மிகவும் வரவேற்கத்தக்கது. இதுபோன்ற பல்வேறு நல திட்டங்களை மாணவர்களுக்கு முதல்வர் ஜெகன் மோகன் செய்து வருகிறார். தற்போது மாநிலம் முழுவதும் 7ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதத்திற்கு 10 சனிடைசர் நேப்கின் வழங்க உத்தரவு பிறப்பித்தார். வருடத்திற்கு 120 சானிடைசர் நேப்கின் வழங்க சுவேட்சா திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் நேற்று காணொலியில் தொடங்கி வைத்தார். மாநகராட்சி பள்ளியிலும் சுவேட்சா திட்டத்தை தொடங்கி வைத்தேன்இந்த திட்டத்தால் மாநிலம் முழுவதும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் பலர் பயனடைவர். ஏராளமான ஏழை பெண்கள் சானிடரி நேப்கின் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனை போக்கவும் மகளிர் சுய உதவி குழு கடைகளில் குறைந்த விலைக்கு சானிடரி நேப்கின் வழங்க முதல்வர் ஜெகன் மோகன் ஏற்பாடு செய்து வருகிறார். இதுபோன்ற பல நலத்திட்டங்களை முதல்வர் ஜெகன் மோகன் செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார் இதில் கலெக்டர் முருகன் ஹரிநாராயணன், இணை கலெக்டர் ராஜசேகர், சித்தூர் எம்எல்ஏ ஜங்கர்பள்ளி சீனிவாசலு, மாவட்ட கல்வித்துறை அதிகாரி புருஷோத்தம், மாநகராட்சி மேயர் அமுதா, மாநகராட்சி ஆணையர் விஸ்வநாத், ஆந்திர மாநில போக்குவரத்து துணை சேர்மன் விஜயனந்த், மாநகராட்சி துணை மேயர் ராஜேஷ் குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews