அக்டோபர் 5, 6, 8, 9 தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 04, 2021

Comments:0

அக்டோபர் 5, 6, 8, 9 தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

IMG_20211004_162614
வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகிற 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய இரண்டு நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. வேலுர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரை ஆணைக்கிணங்க அனைத்து பள்ளிகளும் தேர்தல் வாக்குச் சாவடி மையங்களாக செயல்படவுள்ளதாலும் , 05.10..2021 மற்றும் 08.10.2021 ஆகிய இரண்டு நாட்கள் தேர்தல் பணி ஒதுக்கீட்டு ஆணை பெறுவதற்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லவுள்ளதால் 05-10-21 மற்றும் 08-10-21 ஆகிய இரண்டு நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

மேலும் , தேர்தல் நடைபெறும் நாளான 06-10-2021 அன்றும் 09-10-2021 அன்று அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் தேர்தல் பணியினை மேற்கொள்ளவுள்ளதால் தேர்தல் நடைபெறும் நாட்களான 06-10-21 மற்றும் 09-10-21 ஆகிய இரண்டு நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

07-10-2021 அன்று வியாழக்கிழமை பள்ளி வழக்கம் போல் செயல்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84631080