தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவலா? இல்லையா? சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 24, 2021

Comments:0

தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவலா? இல்லையா? சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

பல்வேறு நாடுகளில் கொரோனா மூன்றாவது அலைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதனிடையே, தமிழகத்திலும் மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது; "தமிழகத்தில் நடைபெறும் 6ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் மூலம் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள 1.40 கோடி முதியவர்களில் 47 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.

தடுப்பூசி அவசியம்

2வது தவணை தடுப்பூசியை 22 லட்சம் முதியவர்கள் மட்டுமே போட்டுள்ளனர். இறப்பு விகிதம் அதிகம் உள்ளதால் கொரோனா தடுப்பூசி போடாமல் இருப்பது சரியல்ல. தமிழகத்தில் இதுவரை கொரோனா மூன்றாவது அலைக்கான அறிகுறிகள் இல்லை. அறிகுறிகள் இல்லை என்றாலும் மூன்றாவது அலை வராது என்று கூற இயலாது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் சிலவற்றில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எப்போது?

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. மழைக் காலங்களில் பரவும்

நோய்களில் இருந்தும் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்" என்றார்.

உயிரிழப்பு இல்லை

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரும்பாலும் மரணம் ஏற்படுவதில்லை என இராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை இராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது: தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஏற்கனவே உள்ள

வேறு சில பாதிப்புகள் உள்ளிட்ட காரணங்களால் 4% மக்களுக்கு மட்டுமே இறப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முதல்வர் நேரில் ஆய்வு

சென்னையில் 1, 200க்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை. ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகரில் உள்ள அரசு இசேவை மையத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து. பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews