உடுமலையில் சைனிக் பள்ளி மாணவர்கள் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியில் சுமார் 750 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து படித்து வரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 40 நாட்களாக நேரடி வகுப்புகள் நடந்து வந்தன. இதற்காக மொத்தம் 95 மாணவர்கள் பள்ளியில் தங்கிப் படித்து வந்தனர். இந்நிலையில் 13 மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொற்று உள்ளதா என அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கூறியது: 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது உண்மைதான். இவர்களின் பெற்றோர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.