தமிழகம் முழுவதும் திருக்கோயில்களில் பாதுகாப்பிற்கு 10 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 12, 2021

Comments:0

தமிழகம் முழுவதும் திருக்கோயில்களில் பாதுகாப்பிற்கு 10 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம்

தமிழகம் முழுவதும் திருக்கோயில்களில் பாதுகாப்பிற்கு 10 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம்!



தமிழ்நாடு முழுவதும் திருக்கோயில்களின் பாதுகாப்பிற்கென 10,000 பாதுகாப்பு பணியாளர் கள் நியமனம் செய்யப்பட உள்ளார்கள். அவர் களுக்குத் தேவையான |பயிற்சிகள் வழங்கப்படும் என இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல் தெரி வித்துள்ளார்.

சென்னை, நுங்கம்பாக் 1கம், இந்து சமய அற [ நிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று (11.10.2021) சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு கள் குறித்து காஞ்சிபுரம் | மற்றும் வேலூர் மண்டலத் |தில் உள்ள அனைத்து |அலுவலர்களுடன் இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையில் ஆலோ சனைக் கூட்டம் நடை பெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அவர் களின் அறிவுறுத்தலின் படி சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில்

திருப்பணிகள், திருத்தேர், திருக்குளங்கள், நந்தவனங் கள் திருமண மண்டபங் கள், புதிய கல்லூரிகள், நலதிட்ட உதவிகள், பணி யாளர் நியமனம் உட்பட பல்வேறு பணிகள் அடங் கும். இந்த அறிவிப்புகளை ஓராண்டுக்குள் செயல் படுத்துவதில் துறை அலு வலர்கள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் ஆக்கிரமைப்புகள் அகற் றும் பணிகளை திருக் கோயில் பணியாளர்கள் உடனே செயல்படுத்த வேண்டும். தற்காலிகமாக நியமிக்கப்பட்டு 5 வருடங் களுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றி வந்த பணியாளர்களுக்கு முதலமைச் சர் அவர்கள் பணிநியமன ஆணை களை விரைவில் வழங்க இருக்கின்றார்கள்.

மானிய கோரிக்கையில் அறிவித் தப்படி தமிழ்நாடு முழுவதும் திருக்கோயில் களின் பாதுகாப்பிற்கென 10,000 பாதுகாப்பு பணி யாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளார்கள். அவர்களுக்குத் தேவை யான பயிற்சிகள் வழங்கப் படும்.

இந்த ஆய்வின் போது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி. சந்திரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ. குமர குருபரன், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்), இரா.கண்ணன் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews