அனைத்து துவக்க நிலை வகுப்புகளும் வரும் 27ம் தேதிக்குள் ஆய்வு செய்யப்பட்டு தயார் நிலை யில் இருக்க வேண்டுமென தொடக்க கல்வி இயக் குனர் உத்தரவிட்டுள்ளார்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவ., 1 முதல் பள்ளிகள் திறக் கப்படும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவி ரமடைந்துள்ளது.
பள்ளிகள் தோறும் பின்பற்ற வேண்டிய வழி காட்டு நெறிமுறைகளை, தொடக்க கல்வி இயக் குனர் அறிவொளி வெளியிட்டார். அதில் கூறியி ருப்பதாவது: நீண்ட இடைவெளிக்கு பின் மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கேற்பதால், அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தி எளிதில் அணுகு வதற்கு தேவையான நடவடிக்கையை ஆசிரியர் கள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகங் கள், வகுப்பறைகள், கழிவறைகள் தூய்மையான முறையில் பராமரிக்கப்பட்டிருப்பதை உறுதி செய் வது அவசியம்.
வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் தங்கள் எல்லைக் குட்பட்ட அனைத்து பள்ளிகளையும், பார்வை யிட்டு, பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுரை வழங்க வேண்டும். வரும், 27ம் தேதிக்குள், 100 சதவீத பள்ளிகளும் ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.