தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 VAO தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இம்மாததிற்குள் வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்து உள்ளனர். TNPSC வெளியிட்டு உள்ள வருடாந்திர தேர்வு கால அட்டவணையின் படி செப்டம்பரில் குரூப் 4 அறிவிப்பு வெளியாகும் என குறிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
TNPSC தேர்வு:
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளின் காரணமாக நேரடி முறையில் தேர்வுகள் நடைபெறுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது. இதனால் பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, சில தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டன. TNPSC குரூப் 4 போன்ற தேர்வுகளுக்கு லட்சக்கணக்கில் மாணவர்கள் விண்ணப்பம் குவியும் என்பதால் அதனை ஆன்லைனில் நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மேலும் வருங்காலத்தில் அரசுப்பணியாளர் தேர்வுகளை ஆன்லைன் வாயிலாக நடத்தவும் திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து உள்ளது. இதனால் அரசின் அனுமதியோடு போட்டித் தேர்வுகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனவே TNPSC சார்பில் அடுத்தடுத்து 3 அறிவிப்புகள் வெளியாகியது. மேலும் அரசில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. எனவே விரைந்து அதனை நிரப்ப வேண்டும் என போட்டித் தேர்வர்கள் கோரி உள்ளனர். மற்ற தேர்வுகளை விட TNPSC குரூப் 4 VAO தேர்வுகளுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. ஏனென்றால் 10ம் வகுப்பு தகுதி, உடனடி வேலை என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இதனால் இத்தேர்வுக்கு கடும் போட்டி நிலவும். TNPSC வெளியிட்ட வருடாந்திர கால அட்டவணையின் படி இம்மாதம் (செப்டம்பர்) குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டு இருந்தது.
அவ்வாறு அறிவிப்பு வெளியானால் டிசம்பர் மாதம் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளது. மேலும் குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட வேண்டும் என கோரப்பட்டு உள்ளது. எனவே அரசுப்பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வர்களை கருத்தில் கொண்டு விரைந்து அதற்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. TNPSC சார்பில் சில நாட்களுக்கு முன்னர் உதவி அரசு வழக்கறிஞர், ஜியாலஜிஸ்ட் மற்றும் ஐடிஐ முதல்வர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்புகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.