மதிப்பெண் சான்றிதழை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவேற்ற, மாணவர்களை அலைக்கழிக்க கூடாதென, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பள்ளியில் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான கல்வி சான்றிதழ்கள், கடந்த சில ஆண்டுகளாக, அந்தந்த பள்ளி மூலமாகவே, மாவட்ட வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறது.சான்றிதழ் வழங்கியதும், வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவேற்றி, அடையாள எண் வழங்கப்பட வேண்டும். சர்வர் குளறுபடியால், பல பள்ளிகளில் இணையதளத்தை இயக்க முடியாமல், மாணவர்களை காத்திருக்க வைப்பது வழக்கம். ஆனால் தற்போது, கொரோனா தொற்று பரவல் காரணமாக, மாணவர்களை வளாகத்திற்குள், காத்திருக்க வைக்க கூடாதென, தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவேற்ற வேண்டிய சான்றிதழ்களின் நகல்களை பெற்று கொண்டு, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கியதும், மாணவர்கள், பெற்றோரை அனுப்பி விட வேண்டும்.
வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவேற்றிய பிறகு, மாணவர்களுக்கு பதிவு எண் வழங்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் வளாகத்திற்குள், கூட்டமாக மாணவர்கள் இருப்பதை அனுமதிக்க கூடாதென, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.