NEET UG 2021 – அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான கட் ஆப் விவரங்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 08, 2021

2 Comments

NEET UG 2021 – அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான கட் ஆப் விவரங்கள்!

வரும் செப்டம்பர் 12 ஆம் தேதியன்று நடத்தப்பட இருக்கும் நீட் UG நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் கட் ஆப் மதிப்பெண்களை வைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்யும் வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வு

நாடு முழுவதும் செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் UG நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. நேரடி முறையில் நடத்தப்பட இருக்கும் இந்த தேர்வுக்கான அனுமதி சீட்டுகள் இன்று (செப்டம்பர் 7) வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு மூலம் 542 மருத்துவம், 313 பல் மருத்துவம், 914 ஆயுஷ் மற்றும் 47 BVSc மற்றும் AH கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

இந்த நுழைவுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் கட்ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயில வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் NEET UG நுழைவுத் தேர்வுல் மாணவர்கள் எடுக்கும் கட்ஆப் மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிடும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் MBBS, BDS, ஆயுஷ், BVSc மற்றும் AH போன்ற மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அந்த வகையில் உயர்மட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கான நீட் கட்ஆப் மதிப்பெண்களை எதிர்பார்க்கும் கல்லூரிகளின் விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், பொது மற்றும் EWS மாணவர்கள் நீட் தேர்வில் 50% நீட் கட்ஆப் மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். அதே நேரம் SC/ST/OBC போன்ற பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் 40% கட்ஆப் மதிப்பெண்களை எடுக்க வேண்டியது அவசியம் என NTA அறிவித்துள்ளது.

இந்த நீட் கட்ஆப் மதிப்பெண்களை நிர்ணயிக்கும் போது, 2021 நீட் தேர்வுக்கு தேர்வானவர்களின் எண்ணிக்கை, இருக்கைகளின் மொத்த எண்ணிக்கை, நீட் தேர்வின் சிரம நிலை, நீட் முந்தைய ஆண்டுகளின் கட்ஆப் ஆகியவை முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த கட் ஆப் மதிப்பெண்களை வைத்து சேர்க்கைக்கான தகுதி பட்டியலை NTA தயாரிக்கும். அடுத்ததாக தகுதித்தேர்வு மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் நீட் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த கலந்தாய்வு மத்திய பல்கலைக்கழகங்கள், ESIC அல்லது AFMC நிறுவனங்கள், எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான மருத்துவ ஆலோசனை குழு (MCC) மற்றும் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) மூலம் நடத்தப்படும். இதையடுத்து அந்தந்த மாநில மருத்துவ அதிகாரிகள், 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான சேர்க்கை செயல்முறையை நடத்துவார்கள்.

இப்போது நீட் விண்ணப்பதாரர்கள் பெற்ற கட் ஆப் மதிப்பெண்களை வைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் இருந்து சிறந்த மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்யலாம். அந்த வகையில்,

டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி – அகில இந்திய ஒதுக்கீடு – 51 கட்ஆப் – 701 நீட் மதிப்பெண்கள்

வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மருத்துவ அறிவியல் நிறுவனம் – அகில இந்திய ஒதுக்கீடு – 970 கட்ஆப் – 675 நீட் மதிப்பெண்கள்

புதுச்சேரி ஜவஹர்லால் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் – அகில இந்திய ஒதுக்கீடு – 239 கட்ஆப் – 690 நீட் மதிப்பெண்கள்

மணிபால் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி – மேலாண்மை ஒதுக்கீடு – 34613 கட்ஆப் – 572 நீட் மதிப்பெண்கள்

லக்னோ கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம் – அகில இந்திய ஒதுக்கீடு – 1800 கட்ஆப் – 665 நீட் மதிப்பெண்கள் தேவைப்படும்.

2 comments:

  1. I'm honestly impressed by the time and effort you put into this, Keep it up!


    hope the playlist help in creating more content.
    https://www.youtube.com/playlist?list=PL316simlc7aJZGqNDj9taOB6Tj_ke0Bwe

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews