அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் தேர்வு நடத்த உத்தரவு - மறுபரிசீலனை செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 24, 2021

Comments:0

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் தேர்வு நடத்த உத்தரவு - மறுபரிசீலனை செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல்

சேலம் மாவட்டத்தில் அரசும் பள்ளி மாணவர்களுக்கு தினமும் சிறு தேர்வுகள் நடத்த உத்தரவிட்டுள் ளதை, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.


தமிழகத்தில் கொரோனா கட்டுப்பா டுகளுடன் பள்ளிகள் திறக் கப்பட்டு, 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாண வர்களுக்கு நேரடிவகுப்பு கள் நடத்தப்பட்டு வருகின் றன. சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு, நகரவை, அரசு நிதியுதவி பெறும், நலத்துறை பள் ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயி லும் மாணவர்களுக்கு, பள்ளி வேலை நாட்களில் தினந்தோறும் தேர்வுகள் நடத்த, மாவட்ட சிஇஓ முருகன் உத்தரவிட்டுள் ளார். அதன்படி, பள்ளி மாணவர்கள் காலை 8.30மணி முதல் பள்ளிக்கு வருவதால், தேர்வுகளின் அட்டவணைக்கு ஏற்ப அன்றைய தேர்வுக்குரிய பாடங்களை, மாண வர்கள் வகுப்பறையில் அமர்ந்து படிக்க தலைமை ஆசிரியர்கள் ஏற்பாடு களை மேற்கொள்ள அறி வுறுத்தப்பட்டுள்ளது.


பள்ளி வேலை நேரம் முடிந்த பின்னர், தினந் தோறும் ஒரு பாடத்திற்கு 30 மதிப்பெண்களுக்கு மேல் வினாத்தாள் தயா ரித்து, அதன் அடிப்ப டையில் தேர்வு நடத்த வேண்டும். நோய் தொற்று சார்ந்த அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின் பற்ற, சுழற்சி முறையில் காலை 8.30மணிக்கு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். எழுத மற்றும் வாசிக்க தெரியாத திறன்குறைந்த 9ம் வகுப்பு மாண வர்களுக்கு, சம்பந்தப் பட்ட பாட ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும். தேர்வு நடத் தப்பட்ட விடைத்தாளை 2 நாட்களில் மதிப்பீடு செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.


அத்துடன், உடனடி யாக மதிப்பெண்களை உரிய பதிவேட்டில் பதிவு செய்து, தலைமை ஆசிரி யர் கையொப்பம் பெற வேண்டும். ஒவ்வொரு தேர்வு முடிவுற்ற பின் மாணவர்களின் பெற் றோரிடமும் கையொப் பம் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே. நாள் தோறும் தேர்வு நடத்தப் பட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என ஆசிரியர் கள் கோரிக்கை விடுத் துள்ளனர். இது குறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசி ரியர்கள் கூறுகையில், 'மாணவர்கள் வாரத்திற்கு 6நாட்கள் பள்ளிக்கு வருவ தால், ஏற்கனவே மனதள வில் சோர்வாக உள்ளனர். இந்த சமயத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், நாள் தோறும் ஒரு மணி நேரத்திற்கு தேர்வு நடத்தினால், மாண வர்கள் பள்ளிக்கு வரவே அஞ்சும் நிலை ஏற்படும். அதேசமயம், இதுபோன்ற உத்தரவுகளால், ஆசிரியர் கள் பாடம் நடத்துவதை விட, பதிவேடுகள் தயார் செய்யவே அதிக நேரம் செலவிட நேரிடுகிறது. எனவே, இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,' என்றனர்.
IMG_20210924_093901

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84730445