தமிழகத்தில் பள்ளி வேலை நேரம் தொடர் பாக உரிய உத்தரவு வராததால், தலைமை ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனை தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதையடுத்து, கடந்த 1ம் தேதி பள்ளி, கல் லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும். வகுப்புகள் நடந்து வரு கிறது. இதேபோல், கல்லூரிகளில் சுழற்சி அடிப்படையில் இரண்டு, 3ம் ஆண்டு மாணவர்கள் வரவழைக்கப்பட்டு வகுப்பு நடத்தப்படுகிறது. நோய் பரவலை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள். ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், பள்ளி வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது, கா 9.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.ஆனால், சேலம் மாவட்டம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், உரிய பள்ளி வேலை நேரம் கடைபிடிக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், உரிய உத்தரவுகள் வராததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால், பள்ளி தலைமை ஆசிரியர்களும், பெற்றோரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
பள்ளிகள் திறந்ததும் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நோய்தடுப்பு கட்டுப்பாடுகள் குறித்தும் தெளி வான சுற்றறிக்கைகள், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டது. அதையே பள்ளிகளில் கடைபிடித்து வருகிறோம். இதனிடையே, பள்ளிகள் மாலை 3.30 மணி வரை மட்டுமே செயல்படும் என அமைச்சர் அறிவித்தார். ஆனால், அந்தந்த மாவட்ட சிஇஓக்கள் பள்ளிவேலை நேரம் எந்தவித அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளை கேட்டால், பள்ளிக்கல்வி இயக்குநரகத்திலிருந்து உரிய உத்தரவு வராமல் எது வும் கூறமுடியாது என தெரிவிக்கின்றனர். அதேசமயம், மாணவர்களும், பெற்றோர்களும் அமைச்சர் கூறியதை மேற்கொள் காட்டி, மாலை 3.30 மணிக்கே மாணவர்களை வெளியே விட வலியுறுத்துகின்றனர். பிள்ளைகளை அழைத்துச் செல்ல 3.30 மணிக்கு வரும் பெற்றோர்கள், பள்ளி வெளியே காத்துக்கிடக்கின்றனர். அப்போது, பல பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. தனியார் பள்ளிகள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுவதால், அங்கு எந்தவித பிரச்னை எழவில்லை. எனவே, பள்ளி வேலைநேரம் தொடர்பான தெளிவான உத்தரவை அதிகாரிகள் பிறப் பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.