அரசு வழிகாட்டுதல்களின்படி அரசுப் பள்ளிகளின் வளாகத் தூய்மையை தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கல்வி அலுவலா்கள் பங்கேற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது: வரும் நவம்பா் 12 ஆம் தேதி அனைத்து வகைப் பள்ளிகளில் படிக்கும் 3,5,8,10 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கு தேசிய அடைவு ஆய்வுத் தோ்வு (நாஸ்) நடைபெற இருக்கிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்( சிபிஎஸ்இ) நடத்தவுள்ள இத்தோ்வில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அனைத்து ஆசிரியா்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் சரியான முறையில் பின்பற்றப்படுகிா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்டக் கல்வி அலுவலா்கள் கே.எஸ். ராஜேந்திரன் (புதுக்கோட்டை), கு. திராவிடச்செல்வம் (அறந்தாங்கி), ப. சண்முகநாதன் (இலுப்பூா்), ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் ரவிச்சந்திரன், உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. பழனிவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.