மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் எவ்வாறு நிர்ணயம் செய்வது? - Illustrations & Formula - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 09, 2021

1 Comments

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் எவ்வாறு நிர்ணயம் செய்வது? - Illustrations & Formula

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் எவ்வாறு நிர்ணயம் செய்வது? - Illustrations & Formula - வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்! அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / நகராட்சி / மாதிரி / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2021 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைகேற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி / மாதிரி / மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படவேண்டும். இதன் அடிப்படையில் 2021-2022ம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம் சார்பான பணிகள் கல்வி மேலாண்மை தகவல் முறைமை ( EMIS ) மூலமாக மேற்கொள்ளப்பட இருக்கின்றது . எனவே EMIS இணையதளத்தில் பள்ளிகள் சார்ந்த கீழ்குறிப்பிட்ட விவரங்கணை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

1 , மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அரசு / அரசு மாதிரிப் பள்ளிகள் / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2021 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையினை வகுப்பு வாரியாகவும் ( Class We ) மற்றும் தமிழ் வழி / ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் ஆகியவற்றினை பதிவேற்றம் செய்தல் வேண்டும். 2. ஒவ்வொரு பள்ளியிலும் அரசால் அனுமதிக்கப்பட்ட ( Sandianed Post details ) முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை -1 பணியிடங்களின் விவரங்களை பள்ளியின் அளவுகோல் பதிவேட்டின்படி ( Scale Rejsta ) ஒப்பிட்டு சரிபார்த்து பதிவேற்றம் செய்திடல் வேண்டும் . அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது இப்பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்டு ( Supls Past withait psar ) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டிருந்தால் பள்ளியின் அளவுகோல் பதிவேட்டில் ( Sale Regisa ) சரண்செய்யப்பட்ட பணியிடங்களை நீக்கம் செய்வதுடன் , அப்பணியிடங்களை எக்காரணம் கொண்டும் மீளவும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாக கருதி பதிவேற்றம் செய்தல் கூடாது.

3. அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை -1 பணியிடங்கள் சார்பான முழு விவரங்களையும் ( Tadha Profile ) எவருடைய பெயரும் விடுபடாமல் EMIS இணையதளத்தில் உள்ள கலத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.



PG Fixation - CEO Proceedings - Download here

Illustrations & Formula - Download here

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews