மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீட்டிலேயே கல்வி, மருத்துவம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு:
மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு அவ்வப்போது சலுகைகள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு வீட்டிலேயே கல்வி, இயன்முறை மருத்துவம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அதில் பிறப்பு முதல் 18 வயதிற்குட்பட்ட 7,726 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளி வயதை அடைந்த பிறகும், உயர் ஆதரவு தேவைப்படும் (பலதரப்பட்ட குறைபாடுகள், அறிவுசார் குறைபாடு, பெருமூளை முடக்குவாதம், மன இறுக்கம் மற்றும் பல) காரணத்தால் பள்ளிக்கு வர இயலாத நிலையில் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த மாணவர்களுக்குக் கல்வி, இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளை வீட்டுக்கே சென்று வழங்கி, அவர் தம் கற்றலை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு, ஒரு கல்வித் திட்டம் தொடங்கப்படும் எனவும் மாணவருக்கு ரூ.10,000 வீதம் 7,786 மாணவ/ மாணவியர்க்கு ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்” எனவும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.