தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் இடங்களை சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
புதிய கல்லூரிகள் :
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது. அதனை தொடர்ந்து கல்லூரிகளில் கடந்த ஜூலை 26 முதல் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. தற்போது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மேலும் மாணவர்கள் தங்கள் வரிசை பட்டியலை கல்லூரி இணையதளங்களில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று கடந்த வாரம் தகவல் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அவர், புதிதாக அமையவுள்ள 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் இடங்களையும் அறிவித்துள்ளார்.
அதன்படி திரிசூழி, திருக்கோவிலூர், ஏரியூர், ஒட்டன்சத்திரம், தாராபுரம், ஆலங்குடி, கூத்தாநல்லூர், சேர்காடு, தாளவாடி, மானூர் ஆகிய 10 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமையவுள்ளது. செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், நந்தனம், திருப்பூர் அரசு கலைக் கல்லூரிகளில் ஆராய்ச்சிப் பாடப் பிரிவு தொடங்கப்படவுள்ளது. உயர்கல்வியில் வெவ்வேறு பாடப் பிரிவுகளிலிருந்து 100 பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.