தமிழகத்தில் குழந்தை கவிஞர்களுக்கு ‘கவிமணி விருது’ – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 26, 2021

Comments:0

தமிழகத்தில் குழந்தை கவிஞர்களுக்கு ‘கவிமணி விருது’ – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழகத்தில் இளம் வயது எழுத்தாளர்களுக்கு ‘கவிமணி விருது’ வழங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவித்து உள்ளார்.

கவிமணி விருது:

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த விவாதங்கள் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை சார்பாக விவாதங்கள் இன்று சட்டசபை உறுப்பினர்களால் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எழுந்து பேசினார். அவரது உரையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நாட்டை காணவில்லை. இதனை மீட்டெடுக்க தற்போதைய முதல்வர் தலைமையிலான அரசு முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார். மேலும், அவர் பேசுகையில் மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில திறமையை தனியார் பள்ளி மாணவர்களின் திறனுக்கு உயர்த்த ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் நடத்தப்படும். இதனை அடுத்து குழந்தை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் சிறப்பு அறிவிப்பு ஒன்றையும் சட்டசபையில் வெளியிட்டார்.

அது என்னவெனில், நாட்டுப்புற கலைஞர்களின் உதவியுடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கரகாட்டம், கும்மி, சிலம்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், 18 வயதிற்கு உட்பட்ட குழந்தை எழுத்தாளர்களின் திறமையை சிறப்பிக்கும் வகையில், 3 சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்து ரூ.25000 ரொக்கப் பரிசும், கவிமணி என்ற விருதும் வழங்கப்பட உள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு குழந்தை எழுத்தாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews