அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் - தற்போதைக்கு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 19, 2021

1 Comments

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் - தற்போதைக்கு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆப்பு., சற்றுமுன் சட்டப்பேரவையில் கைவிரித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.!

தமிழக அரசின் நிதி நிலைமையை நினைத்தால் அச்சமாக உள்ளது என்று, தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை பட்ஜெட் மீதான பதில் உரையில் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவிக்கையில், "பல விவகாரங்களில் முடிவெடுக்க முடியவில்லை. தமிழக அரசின் நிதிநிலைமை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்ற முடியாதுயாதற்கு இந்த நிதி சூழல் தான் காரணம்.

அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். ஆனால், நிதி சூழல் மந்த நிலையில் இருக்கிறது என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது உரையில் தெரிவித்துள்ளார். இதில், பழைய ஓய்வூதிய (பென்ஷன்) திட்டத்தை நிறைவேற்ற முடியாத சூழல் என்று அமைச்சர் தியாகராஜன் தெரிவித்திருப்பதால், தற்போதைக்கு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அதாவது, திமுகவின் தேர்தல் வாக்குறுதியை தற்போது நிறைவேற்ற முடியாது என்று நிதி அமைச்சர் தெரிவித்து உள்ளார். இன்னும் புரியின்படி சொல்லவேண்டுமானால், திமுக தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், தற்போதைய நிதி சூழல் காரணமாக அதை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளதாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி இந்த வருடம் இல்லை என்று தெரிவித்த நிலையில், தற்போது பழைய பென்சன் திட்டமும் கொண்டுவர முடியாத சூழ் உள்ளதாக தெரிவித்திருப்பது, தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

1 comment:

  1. அரசியலவாதிகள் தேர்தல் காலங்களில் நிதி சம்பந்தமான அனுகூலங்களை மிகக் கவனமாக கையாள வேண்டும் அரசு ஊழியர்கள் நம்பிக்கையுடன் எதிபார்புடையவர களமாக இருப்பார்

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews