மருத்துவத் துறையில் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் எப்போது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 07, 2021

Comments:0

மருத்துவத் துறையில் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் எப்போது?

தமிழகத்தில் மருத்துவத் துறையில் ஒப்பந்த அடிப் படையில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படு வார்களா என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம ளித்துள்ளார்.

சென்னை கிண்டி கிங் கரோனா மருத்துவமனைக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தனியார் அமைப்பு இணைந்து ரூ.16 லட்சம் மதிப்புள்ள கரோனா நோய்த்தடுப்பு உபகர ணங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனி டம் வெள்ளிக்கிழமை வழங்கினர்.

அப்போது, மருத்துவமனை இயக்குநர் டாக்டர் நாராயணசாமி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக் கிரமராஜா, மாநில பொருளாளர் வி.கோவிந்தராஜலு, ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களி டம் கூறியது: கரோனா 3-ஆவது அலையில் குழந்தைகள் பாதிக் கப்படுவார்கள் என்பது யூகம் என்று ஒரு சில மருத்துவ வல்லுநர்க ளும், வேறு சிலரோ குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் இரு வேறு கருத்துகளை தெரிவிக்கின்றனர். ஆனாலும், 3-ஆவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவம னைகளிலும், குழந்தைகள் தீவிர சிகிச்சை வார்டு திறக்கப்பட்டு உள் ளது. எனவே பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை.

30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாகவே ஒப்பந்த அடிப்ப டையில் பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்வது என்பது சாத்தியமில்லாதது. கரோனா பேரிடர் முழுவதும் முடிந்த பிறகு, ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு காலி பணியிடங்கள் இருக் கின்றன என்பதை கண்டறிந்து, அந்த காலிப்பணியிடங்களுக்கு ஏற் கெனவே ஒப்பந்தப் பணியில் இருக்கும் தகுதியானவர்களை கண்ட றிந்து, அவர்களை பணியமர்த்த சட்டத்தில் இடம் இருக்கிறதா? என் பதை எல்லாம் ஆராய்ந்த பிறகு தான் பணி நிரந்தரம் தொடர்பான முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews