பள்ளிகளில் மனப்பாட முறைக்கு மாற்றாக சிந்திக்கும் முறைப்படி பாடங்கள் கற்பிக்க நடவடிக்கை : தமிழக பட்ஜெட்டின் கல்வித்துறை அறிவிப்புகள்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 13, 2021

Comments:0

பள்ளிகளில் மனப்பாட முறைக்கு மாற்றாக சிந்திக்கும் முறைப்படி பாடங்கள் கற்பிக்க நடவடிக்கை : தமிழக பட்ஜெட்டின் கல்வித்துறை அறிவிப்புகள்!!

தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ- பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.2021-2022க்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராகன் தாக்கல் செய்து உரை ஆற்றினார். அதில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பாக முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. *தமிழ்நாட்டுக்கு தனித்துவமான கல்விக்கொள்கை உருவாக்கப்படும்.

*மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.

*பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599.54 கோடி ஒதுக்கீடு.

*மலைப்பகுதிகளில் புதிதாக 12 தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும், 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.

*பள்ளிகளில் மனப்பாட முறைக்கு மாற்றாக சிந்திக்கும் முறைப்படி பாடங்கள் கற்பிக்க நடவடிக்கை.

அடிப்படைக் கல்வி அறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய எண்ணும் எழுத்தும் இயக்கம் ₹66.70 கோடி *மதிப்பீட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

*அரசுப்பள்ளி மாணவர்கள் கணினித்திறன்களை இளம் வயதிலேயே உறுதி செய்ய ரூ.114.18 கோடி ஒதுக்கீடு.

*865 உயர்நிலைப்பள்ளிகளில் ரூ.20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். *இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும். *25 அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ரூ.10கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.

*உயர்கல்வித்துறைக்கு ரூ.5369 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*தமிழகத்தில் ஆளில்லா விமானங்களுக்கென புதிய விமானக்கழகம் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்படும்.

*உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் அகில இந்திய அளவில் 27.1% ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அது 51.4% ஆக உள்ளது; 17 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்தையும் கொண்டு நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

*17 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்தையும் கொண்டு நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews