இந்திய ஆங்கில மொழி தேர்வு; ஆலோசனை அமைப்பு கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 17, 2021

Comments:0

இந்திய ஆங்கில மொழி தேர்வு; ஆலோசனை அமைப்பு கோரிக்கை

சென்னை-பிரிட்டிஷ் கவுன்சில் நடத்தும், ஐ.இ.எல்.டி.எஸ்., எனப்படும் சர்வதேச ஆங்கில மொழி திறன் தேர்வால், அன்னிய செலாவணி பாதிக்கப்படுவதால் இந்தியா சார்பில் தனி ஆங்கில மொழி திறன் தேர்வை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து, அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு கல்வி ஆலோசகர் அமைப்பான, ஏ.ஏ.ஏ.ஓ.இ.,யின் நிறுவனர் பால் செல்லகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கை:பல்வேறு நாட்டு மாணவர்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு, படிக்கவும், வேலைவாய்ப்புக்கும் செல்வதற்கு, ஐ.இ.எல்.டி.எஸ்., என்ற சர்வதேச ஆங்கில மொழி திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த தேர்வை இங்கிலாந்தை சேர்ந்த பிரிட்டிஷ் கவுன்சில் நடத்துகிறது. இந்த தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகமாகி, அதிக வருவாயும் கிடைக்கிறது.

இந்த தேர்வை நடத்தும் உரிமையை, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஐ.டி.பி., நிறுவனத்துக்கு, 1,300 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. ஆஸ்திரேலிய பல்கலைகளை சேர்ந்த 38 துணை வேந்தர்களால் நடத்தப்படும், ஐ.டி.பி., அமைப்பு, வெளிநாட்டில் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கான 'ஏஜென்ட்'கள் போல் செயல்படுகிறது. இந்நிலையில், ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வுக்கான உரிமையை ஐ.டி.பி., பெற்று, பெருமளவு வருவாய் ஈட்டுகிறது. ஆனால், இந்த சர்வதேச ஆங்கில தேர்வு பிரபலமாவதற்கும், வளர்ச்சி பெறுவற்கும், இந்தியாவில் உள்ள வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்களே காரணம்.இந்தியாவில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர், ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வுக்கு, தலா 15 ஆயிரம் ரூபாய் வீதம் கட்டணம் செலுத்துகின்றனர். தற்போதைய நிலையில், ஆஸ்திரேலிய ஐ.டி.பி., அமைப்புக்கு, 1,200 கோடி ரூபாய் இந்தியாவில் இருந்து அன்னிய செலாவணியாக செல்ல உள்ளது. எனவே, நம் நாட்டின் பொருளாதாரம், வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருக்கும் வகையில், ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வுக்கு இணையாக, இந்தியாவின் சார்பில் சர்வதேச ஆங்கில மொழி திறன் தேர்வை அறிமுகம் செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து பார்லிமென்டுகளில், இந்தியர்கள் முக்கிய பதவிகளில் உள்ளதால், இந்த முயற்சியை எளிதாக வெற்றி பெற செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews