மருத்துவ கலந்தாய்வுக்கு பின் வேளாண் பல்கலை சேர்க்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 28, 2021

Comments:0

மருத்துவ கலந்தாய்வுக்கு பின் வேளாண் பல்கலை சேர்க்கை

மருத்துவ கலந்தாய்வுக்கு பின், வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 10 இளம் அறிவியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன. 14 அரசு கல்லுாரிகள், 28 தனியார் கல்லுாரிகளில், 4,500 மாணவர்கள் கலந்தாய்வில் சேர்க்கபட உள்ளனர். வேளாண் கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தும் பட்சத்தில், பல மாணவர்கள் சேர்க்கை முடிந்து, மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைத்தால் மாறி செல்வர்.

இதன் காரணமாக, மருத்துவ கலந்தாய்வுக்கு பின் வேளாண் கலந்தாய்வு நடத்த பல்கலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கொரோனா காரணமாக விண்ணப்பித்தல், சேர்க்கை அனைத்தும், ஆன்லைன் மூலமே நடத்தப்பட உள்ளது. அதற்கான செயல்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக, நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் பல்கலை டீன் கல்யாணசுந்தரம் கூறுகையில், வேளாண் படிப்புகளுக்கான அறிவிப்பு, 10 நாட்களுக்குள் வெளியிடப்படும். மருத்துவ கலந்தாய்வுக்கு பின் இதற்கான கலந்தாய்வு நடைபெறும். தேவையின்றி, பெற்றோர், மாணவர்கள் பதற்றம் கொள்ள வேண்டாம், என்றார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews