தமிழகத்தில் திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 180 நாட்களில் இருந்து 270 நாட்களாக அதிகரித்து 2016ம் ஆண்டு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை பிறப்பித்தது. இந்த சலுகை, பணி வரன்முறைப்படுத்தப்படாத தற்காலிக பணியாளர்களுக்கும் நீட்டித்து 2020ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த அரசாணைகள் அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், மாநிலத்தில் பல மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், பணி வரன்முறைபடுத்தப்படாத தற்காலிக பெண் பணியாளர்கள் மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரிய விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பணிவரன்முறைப்படுத்தப்படாத தற்காலிக பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பை ஊதியத்துடன் வழங்க உத்தரவிட வேண்டும். இதுதொடர்பான அரசாணையை முறையாக அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி கிருபாகரன் ஆகியோர், மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பணி வரன்முறைப்படுத்தப்பட்ட, வரன்முறைப்படுத்தப்படாத அரசு ஊழியர்களுக்கு இடையில் எந்த பாகுபாடு காட்டக் கூடாது என்று அறிவுறுத்தி அவர்களுக்கு ஒரே மாதிரியாக மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

This is news true because any newspaper or news channel didn't tell it
ReplyDelete