நீட் நுழைவுச் சீட்டுக்கு முன்னரே தேர்வு மையங்கள் வெளியீடு – NTA அறிவிப்பு!
மருத்துவ படிப்பில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வுக்கான தேர்வு மையங்களை நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) அறிவித்துள்ளது.
நீட் தேர்வு:
மருத்துவ படிப்பில் சேர்வதற்கு மத்திய அரசின் மூலம் நடத்தப்படக்கூடிய நீட் எனும் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வாகும் மாணவர்களின் மருத்துவ கனவு மட்டுமே நனவாகும் எனும் சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில் 2021-22 ஆண்டிற்கான நுழைவுத்தேர்வு என்பது கொரோனா பரவல் காரணமாக காலம் தள்ளிப்போய் உள்ளது. மேலும் இந்த ஆண்டு நடைபெறும் தேர்வுகளின் தேதி 12-ம் வகுப்பு தனித்தேர்வர்களின் தேர்வு எழுதும் தேதிக்கு அருகில் வருவதால் தேர்வு தேதி மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சில நாட்களுக்கு முன் நீட் 2021 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. இதில் இன்றைக்கு தேசிய தேர்வாணையம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு மையங்களின் விபரங்களை வெளியிட்டு இருக்கிறது. இதற்கு முன்பு நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தான் முதலில் வெளியிடப்படும்.
இந்த முன்னறிவிப்பிற்கான காரணம் கொரோனா தொற்று பாதிப்பு தான். இதனால் மாணவர்கள் முன்கூட்டியே தேர்வு மையம் குறித்த தகவல்களை கண்டறிய வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதோடு மட்டுமல்லாமல் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 155 லிருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12ல் நடக்க உள்ள நிலையில், அதற்கு மூன்று நாட்கள் முன்னதாக நுழைவுச்சீட்டு வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வாணையம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.