இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட கல்வி சேவை மூலம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முன்னணி கல்வி நிறுவனம் - காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகம்
1986 இல் பொறியியல் கல்லூரியாக நிறுவப்பட்ட காருண்யா, தொழில்நுட்பக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தயாரிப்புகள், காப்புரிமைகள் மூலம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க சமூக அக்கறை கொண்ட ஒரு மிகச்சிறந்த நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. முன்மாதிரியான செயல்பாடுகள் மற்றும் சமூக அக்கறையுடன், உயர் கல்வித் திறன் மற்றும் தொழில்முறை திறனை அடைவதன் மூலம் சமுதாயத்துக்கு சேவை செய்ய இந்த நிறுவனம் தலைமை பண்பு நிறைந்த மாணவர்களை உருவாக்குகின்றது. காருண்யாவிற்கு 1999 ஆம் ஆண்டு தன்னாட்சி அந்தஸ்து (Autonomous Status) வழங்கப்பட்டது மற்றும் UGC சட்டம், 1956 பிரிவு 3 இன் கீழ் MHRD அங்கீகரித்து 2004 ஆம் ஆண்டில் UGC ஆணையத்தால் நிகர்நிலை பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது.
உயர்கல்விக்கு மூன்று தசாப்த கால சேவை, காருண்யா கற்பித்தல்-கற்றல், ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம், சமூக சேவை ஆகியவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ளது. காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகம் தற்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தலையீடுகள் மூலம் நீர், உணவு, சுகாதாரம் மற்றும் ஆற்றல் போன்ற நான்கு முக்கிய சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஈடுபட்டுள்ளது.
ஒரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது என்பது நன்கு ஆவணப்படுத்தப்பட்ட உண்மை, எனவே தொழில்-கல்வி ஒத்துழைப்பு, தொழில்முறை மற்றும் தொழிற்துறை திறன்களை வளர்ப்பது, குறுகிய கால ஆராய்ச்சிக்கான விதை பணம், பதவி உயர்வு ஆகியவற்றுக்கு சமூக ஆராய்ச்சி ஊக்குவிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. திட்ட செயல்படுத்தல், வெளியீடு, ஆலோசனை மற்றும் தயாரிப்புகள் மற்றும் காப்புரிமைகள் ஆகியவற்றின் கூட்டு முயற்சிகள். அதி நவீன தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சியை அதிகரிக்க, காருண்யா இஸ்ரேல், ஜெர்மனி, கனடா, இந்தியா, அமெரிக்கா & தைவான் நாடுகளில் உள்ள புகழ்பெற்ற முன்னணி நிறுவனங்களான BOEING, SIEMENS, IBM, Microsoft, Larsen&Toubro, Novell, CISCO, Salzer Electronics, SUSE, Jasmin InfoTech, EMURGO, IVSE, Test and Verification Solutions Pvt. Ltd., Trident and Pneumatics Pvt. Ltd., AMZ Automotive மற்றும் மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
ஒரு சிறந்த ஆராய்ச்சி சூழல் மற்றும் உள்கட்டமைப்புடன், காருண்யாவில் ஆசிரியர்கள் ஆர் & டி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில், ஆராய்ச்சி மானியமாக ரூ. 34 கோடி ரூபாயை அரசு மற்றும் பிற நிதி நிறுவனங்களான DST, DRDO, DBT, NTRF, BRNS, BRFST, ISRO, MoEF, ICMR மற்றும் NRB வழங்கியுள்ளது. காருண்யாவில் 90% ஆசிரியர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் அவர்களில் பலர் IIT, IIM போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் இருந்தும் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட அனுபவம் கொண்டவர்கள், காருண்யாவின் கற்பித்தல் மற்றும் கற்றல் சூழல் உலகெங்கிலும் உள்ள முதன்மையான பல்கலைக்கழகங்களுக்கு இணையானது. பல ஆசிரிய உறுப்பினர்கள் தொழில் சான்றளிக்கப்பட்டவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுடன் கூட்டு ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை பணிகளைக் கொண்டிருப்பதால், கற்பித்தலின் தரம் மற்றும் ஆராய்ச்சியின் அளவு பாராட்டத்தக்கது.
தொழில் மற்றும் சமூகம் சார்ந்த பாடத்திட்டம் தொழில் வல்லுநர்கள் மற்றும் உயர் புகழ்பெற்ற கல்வியாளர்களால் வடிவமைக்கப்பட்டது, மாணவர்களை நகர்ப்புற, புற நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூகங்களில் நிலவும் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றின் விளைவுகளை குறைப்பதற்கும் தீர்வுகளை வழங்குகிறது. தொழில்முனைவுக்காக கணினி தொழில்நுட்ப மையத்தில் மையப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பு மற்றும் வடிவமைப்பு ஸ்டுடியோ மற்றும் சிறப்பு ஆராய்ச்சி பகுதிகளில் மையங்களைக் கொண்ட பிரிவுகள், மாணவர்களுக்கு நிகழ்நேர திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளைத் தொடர ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பல்கலைக்கழகம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக சேவை ஆகியவற்றில் அனுபவத்திற்காக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, போலந்து, இஸ்ரேல் போன்ற 40 நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப்பை வழங்கியுள்ளது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக கல்வியில் முன்னோடியில்லாத சவால்களை எதிர்கொள்ள, ஆன்லைன் வகுப்புகள் மார்ச் 2020 முதல் இன்றுவரை, வளாகத்தில் உள்ள கணினி தொழில்நுட்ப மையத்தில் (CTC) ஒரு நிபுணர் குழு வடிவமைத்து உருவாக்கிய உள்-மெய்நிகர் தளத்தில் நடத்தப்படுகின்றன. ஆய்வக அமர்வுகள் ஒரு மெய்நிகர் ஆய்வகத்தின் மூலம் நடத்தப்படுகின்றன. லாக்டௌன் காலத்தில் மாணவர் சமூகத்திற்கு கருண்யாவின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், சர்வதேச நிறுவனம் QS I- Gauge டிஜிட்டல் கற்பித்தல் மற்றும் கற்றலில் புதுமைக்காக மற்றும்அதிநவீன காருண்யா ஆன்லைன் வகுப்பறைக்காகவும்பல்கலைக்கழகத்திற்கு E-Lead (E-Learning Excellence for Academic Digitisation) சான்றிதழை வழங்கியுள்ளது.
நீர், உணவு, சுகாதாரம் மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் உள்ள புதுமையான தொழில்நுட்பங்கள், செயல்முறைகள் மற்றும் தயாரிப்புகளை எங்கள் ஆய்வகங்களில் இருந்து களத்திற்கு மாற்ற, காருண்யா 21 தொழில்நுட்ப பணிகளை நிறுவியுள்ளது. பங்கேற்பு அணுகுமுறை மூலம் செயல்பாடுகள், பயிற்சி பட்டறைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வழங்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு 1800-425-4300 என்ற என்னை அழைக்கவும் அல்லது www.karunya.edu என்ற இணையதளத்தின் மூலமாகவும் தெரிந்துகொள்ளுங்கள். மாணவர் சேர்க்கைக்கு https://bit.ly/3yAEFlT இல் உள்நுழைக
Search This Blog
Friday, August 13, 2021
Comments:0
Home
Universities
இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட கல்வி சேவை மூலம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முன்னணி கல்வி நிறுவனம் - காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகம்
இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட கல்வி சேவை மூலம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முன்னணி கல்வி நிறுவனம் - காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.